வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளுக்கான இன்னுமொர் அரிய வாய்ப்பு!
வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளின் முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் செயற்பாட்டினூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்; நோக்கத்தைக் கொண்ட இலங்கை தேசிய நீர்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையுட ன் (NAQDA) இணைந்து நடாத்தும் ஒரு நிகழ்ச்சித்திட்டம். தேசிய நீர்உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினால் டிசம்பர் மாத த் தி ல் நடாத்தப்படவுள்ள கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் துறைகளுக்கான வதிவிடப்பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் எமது இளைஞர் விவகார அலகினூடாகக் கோரப்படுகின்றன. பயிற்சி முடிவில் தேசிய நீர்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் தொழில் முனைவோருக்;கு கடன்வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் இலவச வழிகாட்டல் கருத்தரங்கொன்றில் பங்குபற்றுவதன் மூலம் தங்களுக்கேற்ற பயிற்சிநெறியினைத் தெரிவு செய்து கொள்ள முடியும். பயிற்சிநெறிகள் வீட்டுத்தடாகங்களில் மீன் வளர்ப்பு அலங்கார மீன் வளர்ப்பு கடற்பாசி வளர்ப்பு கடலட்டை வளர்ப்பு மீன்குஞ்சு உற்பத்தி செய்தல் மீனுணவு உற்பத்தி செய்தல் கொடுவா மீன் வளர்ப்பு புகை மற்றும...